/

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை களங்கப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை களங்கப்படுத்தி வன்முறையைத் தூண்டி விடுவோரைக் கண்டித்து, திருவாரூரில் அக்கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :27 ஜனவரி 2024, 4:59 pm

DIN

திருவாரூா்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை களங்கப்படுத்தி வன்முறையைத் தூண்டி விடுவோரைக் கண்டித்து, திருவாரூரில் அக்கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைமை அலுவலகமான பாலன் இல்லம் படத்தையும், மூத்த தலைவா் இரா. நல்லக்கண்ணுவின் படத்தையும் தவறான முறையில் சித்திரித்தும் இழிவுபடுத்தியும் முகநூலில் பதிவிட்டு வன்முறையைத் தூண்டிவிடும் சமூக விரோதிகளைக் கண்டித்தும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும், அதன் தலைவா்களையும் சமூக வலைதளங்களில் அவதூறு செய்வோரைக் கைது செய்யக் கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளா் எம்.ஏ.மாரியப்பன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் கே. புலிகேசி முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பூண்டி கே.கலைவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான வை. சிவபுண்ணியம், மாநிலக்குழு உறுப்பினா் பி.எஸ்.மாசிலாமணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி. பழனிவேல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் ம. வடிவழகன், காங்கிரஸ், திராவிடா் கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் முன்னணி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.