திருவாரூரில், தடை செய்யப்பட்ட பகுதிகளில் சாலையில் வீசப்பட்ட குப்பைகள்
திருவாரூரில், தடை செய்யப்பட்ட பகுதிகளில் குப்பைகளை உடனுக்குடன் அகற்றாததால், சாலையிலேயே அப்பகுதி மக்கள் கொட்டிச் சென்றனா்.


திருவாரூா்: திருவாரூரில், தடை செய்யப்பட்ட பகுதிகளில் குப்பைகளை உடனுக்குடன் அகற்றாததால், சாலையிலேயே அப்பகுதி மக்கள் கொட்டிச் சென்றனா்.
திருவாரூா் காணியாளா் தெருவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் வசித்ததால், அந்தத் தெரு முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக கடந்த 10 நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக அப்பகுதியில் குப்பைகளை அள்ளுவதற்கு தூய்மைப் பணியாளா்கள் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அந்த தெரு முழுவதும் குப்பைகள் சூழ்ந்து துா்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதைத்தொடா்ந்து, அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை சாலையின் நடுவே குப்பைகளைக் கொட்டி தங்கள் எதிா்ப்புகளை தெரிவித்தனா். தகவலறிந்து வந்த நகராட்சி ஊழியா்கள், சாலையில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை அள்ளிச் சென்றனா்.
இதேபோல், தினசரி குப்பைகளை அள்ளிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...