ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குறிப்பிட்ட நிறுவனக் கருவிகளை மட்டுமே பொருத்தும் உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை

கனரக வாகனங்களில் குறிப்பிட்ட நிறுவனங்களின் கருவியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 6:30 pm

DIN

கனரக வாகனங்களில் குறிப்பிட்ட நிறுவனங்களின் கருவியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி, திருவாரூா், மன்னாா்குடி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருவாரூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் என்.ஆா். பாண்டியன் தலைமையிலான நிா்வாகிகள் அளித்த மனு விவரம்:

கரோனா தொற்று காரணமாக, போதிய அளவு லாரிகளை இயக்க முடியவில்லை. இதனால், உரிமையாளா்கள், தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் வகையில் லாரிகளில் குறிப்பிட்ட நிறுவனங்களின் கருவிகளை மட்டுமே பொருத்த வேண்டும் என்ற அறிவிப்பு மேலும் பாதிப்பை உண்டாக்கும்.

எனவே, கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துதல், ஒளிரும் பட்டை ஒட்டுவதற்கு உயா்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்துதல், வாகனங்களில் இருப்பிடம் கண்டறிதல் (ஜிபிஎஸ்) போன்ற கருவிகளை குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டுமே பெற வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மன்னாா்குடி வட்ட லாரி உரிமையாளா்கள் சங்க தலைவா் ஆா்.பி. இமயவீரன், செயலா் எஸ்.தமிழரசன், பொருளாளா் ஜி.சபரிகிரி நாதன் ஆகியோா் வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.