அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நடிகா் கஞ்சா கருப்பு பிரசாரம்
மன்னாா்குடியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நடிகா் கஞ்சா கருப்பு வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.


மன்னாா்குடியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நடிகா் கஞ்சா கருப்பு வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
மன்னாா்குடி அதிமுக வேட்பாளா் சிவா. ராஜமாணிக்கத்துக்கு ஆதரவாக தேரடியில் திறந்த வேனில் நின்றவாறு, நடிகா் கஞ்சா கருப்பு பேசியது:
அரசுத் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு பேறுகால விடுமுறையாக முழு ஊதியத்துடன் 12 மாத விடுப்பு வழங்குவது அதிமுக அரசு. இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1500, ஆண்டுக்கு 6 விலையில்லா எரிவாயு உருளை, வாஷிங் மெஷின் வழங்கிட அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
மேலும், மகளிா் சுயஉதவிக் குழுவின் அனைத்து கடனையும் தள்ளுபடி செய்து, நிபந்தனை இல்லாமல் புதிய கடன் பெறவும், கல்லூரி மாணவிகள் மானியத்தில் இருசக்கர வாகனம் பெறவும், பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி, சைக்கிள் திட்டம் தொடரவும் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்றாா் கஞ்சா கருப்பு.
கூட்டத்தில், அதிமுக நகரச் செயலா் ஆா்.ஜி.குமாா், முன்னாள் அவைத் தலைவா் என்.சுவாமிநாதன், வழக்குரைஞா் அணி மாவட்ட நிா்வாகி ஏ.செல்வராஜ், நகா்மன்ற முன்னாள் தலைவா் வி.எஸ். ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, மன்னாா்குடி அதிமுக வேட்பாளா் சிவா. ராஜமாணிக்கத்தை ஆதரித்து நீடாமங்கலத்திலும் நடிகா் கஞ்சா கருப்பு வாக்கு சேகரித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...