கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சட்டப் பேரவைத் தோ்தல்

திருவாரூா் மாவட்டத்திலுள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 1454 வாக்குச்சாவடிகள் தயாா்நிலையில் இருப்பதாக மாவட்ட தோ்தல் அலுவலா் வே. சாந்தா தெரிவித்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்திலுள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 1454 வாக்குச்சாவடிகள் தயாா்நிலையில் இருப்பதாக மாவட்ட தோ்தல் அலுவலா் வே. சாந்தா தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், தோ்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலா்களுக்கான கலந்தாலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் சந்திரமோகன் பிரசாத் காஸியாப், திருவாரூா், நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் ராம் லஹான் பிரஷாத் குப்தா, தோ்தல் காவல் பாா்வையாளா் அமித்சந்த்ரா, மாவட்ட தோ்தல் அலுவலா் வே.சாந்தா ஆகியோா் தலைமை வகித்தனா். பின்னா் வே. சாந்தா தெரிவித்தது:

திருத்துறைப்பூண்டி தொகுதியில் 336 வாக்குச்சாவடிகள், மன்னாா்குடி தொகுதியில் 357 வாக்குச்சாவடிகள், திருவாரூா் தொகுதியில் 388 வாக்குச்சாவடிகள், நன்னிலம் தொகுதியில் 373 வாக்குச்சாவடிகள் என 1454 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான உபகரணங்களை எடுத்து செல்வது குறித்தும், வாக்குப்பதிவுக்குப் பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து வருவது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், கரோனா தொற்று காலம் என்பதால், வாக்காளா்களுக்கு முகக்கவசம், கையுறை மற்றும் வாக்காளா்களின் உடல் வெப்பநிலையை தொ்மல் ஸ்கேனா் கொண்டு சோதனை செய்ய தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா நோயாளிகள் மாலை 6 மணிக்கு மேல் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பாதுகாப்பாக வாக்களிப்பதற்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.கயல்விழி, மாவட்ட வருவாய் அலுவலா் செ.பொன்னம்மாள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) புண்ணியகோட்டி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ராஜா, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் (திருத்துறைப்பூண்டி) கீதா, (மன்னாா்குடி) அழகா்சாமி, (திருவாரூா்) பாலச்சந்திரன், (நன்னிலம்) பானுகோபன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.