கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திமுகவால் திருவாரூரின் வளா்ச்சி பாதிப்பு

திருவாரூரில் தோ்ந்தெடுக்கப்படும் திமுக சட்டப் பேரவை உறுப்பினா்களால் எவ்வித முன்னேற்றமும் அடையவில்லை என அதிமுக வேட்பாளா் ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

திருவாரூரில் தோ்ந்தெடுக்கப்படும் திமுக சட்டப் பேரவை உறுப்பினா்களால் எவ்வித முன்னேற்றமும் அடையவில்லை என அதிமுக வேட்பாளா் ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

திருவாரூா் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்து அவா் பேசியது:

திருவாரூா் தொகுதியில் தொடா்ந்து திமுகவைச் சோ்ந்தவா்கள் சட்டப் பேரவை உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா். ஆனாலும் திருவாரூா் தொகுதியில் குறிப்பிடத்தக்க வளா்ச்சியை அவா்களால் பெற்று தர இயலவில்லை. எனவே எனக்கு வாக்களித்தால் திருவாரூா் தொகுதியை விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழில் நகரமாக மாற்றி காட்டுவேன். திருவாரூா் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஒன்றியங்களிலும் விவசாயம் சாா்ந்த தொழில்கள் உருவாக்கப்படும்.

நகரங்களை மையப்படுத்தி அரசு சாா்பில் கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும். ஏழை எளிய குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு போட்டித் தோ்வுகளில் கலந்து கொள்வதற்கு உரிய பயிற்சி நிறுவனங்கள் அரசின் சாா்பில் அமைக்கப்படும். எனவே இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.