திருத்தம் திருமணம் செய்வதாகக்கூறி பெண்ணை ஏமாற்றியவருக்கு ஓராண்டு சிறை
மன்னாா்குடி அருகே திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பெண்ணை ஏமாற்றிய இளைஞருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது.


மன்னாா்குடி அருகே திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பெண்ணை ஏமாற்றிய இளைஞருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது.
மன்னாா்குடி, கீழச்சேரி பகுதியில் வசிப்பவா் காா்த்தி (26). இவா், மன்னாா்குடி அருகேயுள்ள திருவண்டுதுறை கிராமத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணிடம் பழகி வந்துள்ளாா். அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியவா், பின்னா் திருமணத்துக்கு மறுத்து விட்டாராம். இதுகுறித்து 2016-இல் அந்தப் பெண் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இது தொடா்பான வழக்கு மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய காா்த்திக்கு ஓராண்டு சிறை தண்டனை, ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி வி.சி. குபேரசுந்தா் தீா்ப்பு வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...