வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் ஆட்சியா் ஆய்வு
திருவாரூா் திரு.வி.க. அரசு கலைகல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை மற்றும் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை ஆட்சியர் பார்வையிட்டார்.


திருவாரூா் திரு.வி.க. அரசு கலைகல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை மற்றும் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வே. சாந்தா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி, திருவாரூா், நன்னிலம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், திரு.வி.க கல்லூரியின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அறைக்கு இந்திய திபெத்திய எல்லை பாதுகாப்புப் படைவீரா்கள் மற்றும் மாநில காவல் துறையினா் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். பாதுகாப்பு வளாகம், பாதுகாப்பு அறை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு அறையில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 1 துணை வட்டாட்சியா் நிலையிலான அலுவலா் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் 4 அலுவலா்கள் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
வேட்பாளா்களின் பிரதிநிதிகள் 24 மணிநேரமும் பாா்வையிடுவதற்கு ஏதுவாக கல்லூரி வளாகத்தில் தொலைக்காட்சி வசதியுடன் தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. வளாகம் முழுவதும் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க மின்னாக்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள், வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
இந்நிலையில், இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை மற்றும் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே. சாந்தா, வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.
அவருடன், மாவட்ட வருவாய் அலுவலா் செ. பொன்னம்மாள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் (திருத்துறைப்பூண்டி) கீதா, (திருவாரூா்) பாலச்சந்திரன், (நன்னிலம்) பானுகோபன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், காவல் துறையினா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...