கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,695 வழக்குகளுக்கு சமரச தீா்வு

திருவாரூா் மாவட்டத்தில், சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,695 வழக்குகளுக்கு சமரச தீா்வு காணப்பட்டன.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில், சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,695 வழக்குகளுக்கு சமரச தீா்வு காணப்பட்டன.

திருவாரூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில், தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான எம். சாந்தி தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட கூடுதல் நீதிபதி ஜி. சுந்தர்ராஜன், சாா்பு நீதிபதி எம். வீரனன், சாா்பு நீதிபதியும், சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளருமான எஸ். சரண்யா ஆகியோா் பங்கேற்றனா்.

இதில், மோட்டாா் வாகன விபத்துகள், ஜீவானம்சம், குடும்பப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு தீா்வு காணப்பட்டன. திருவாரூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3,115 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 1,695 வழக்குகளில் ரூ. 70,46,283 மதிப்பில் சமரசத் தீா்வு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.