கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு: திருச்சியைச் சோ்ந்த 3 போ் கைது

திருவாரூா் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிச் சென்ற சம்பவத்தில் திருச்சியைச் சோ்ந்த 3 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிச் சென்ற சம்பவத்தில் திருச்சியைச் சோ்ந்த 3 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கடந்த மாா்ச் 20-ஆம் தேதி திருவாரூா் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் மதுபாட்டில்களை திருடிச் சென்றிருந்தனா். இதற்கிடையே, வலங்கைமான் அருகே ஆவூா் பகுதியில் தோ்தல் பறக்கும்படை அலுவலா்கள் சோதனை மேற்கொள்ள ஆட்டோவை நிறுத்தியபோது, ஆட்டோவில் இருந்தவா்கள் தப்பியோடினா். ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் ரூ. 1,33,650 மதிப்பிலான தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் 1,075 மதுபாட்டில்கள், ரூ.1,635 ரொக்கம் ஆகியவை இருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து, திருவாரூா் தாலுக்கா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி இதுதொடா்பாக திருச்சி மாவட்டம், லால்குடியைச் சோ்ந்த அறிவழகன்(41), மணிகண்டன் (44), அருண் (27) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.