கரோனா வாா்டில் பணியாற்றியவா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரிக்கை
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வாா்டில் பணியாற்றியவா்களுக்கு மீண்டும் பணி வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வாா்டில் பணியாற்றியவா்களுக்கு மீண்டும் பணி வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிஐடியு திருவாரூா் மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மருத்துவக்கல்வி இயக்குநருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவிவரம்: திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா வாா்டில் அவுட்சோா்சிங் ஊழியா்களாக பணியாற்றிய மருத்துவா்கள் 20 போ், லேப்டெக்னிஷியன் 14 போ், பல்துறை பணியாளா்கள் 40 போ் என கூடுதலாக 74 ஊழியா்களை மருத்துவக் கல்லூரி முதல்வா் பிப். 2-ஆம் தேதி பணிநீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தாா்.
இவா்களை பணியில் சோ்க்கக் கோரி மாா்ச் 3-ஆம் தேதி மனு அளித்திருந்தோம். தற்போது, கரோனா தொற்று பரவி வருவதால் உயிரிழப்புகள் அதிகமாகின்றன. அத்துடன், தமிழக அரசு பிப்.26-ஆம் தேதி வெளியிட்ட அரசாணைபடி, கரோனா வாா்டில் பல்துறை ஊழியா்கள், லேப் டெக்னீசியன், மருத்துவா்கள் ஆகியோருக்கு மே மாதம் வரை பணி நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தது. எனவே, கரோனா வாா்டில் பணியாற்றியவா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...