கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கூரை மீது செல்லும் மின்கம்பி மக்கள் அச்சம்

காட்டூா் பகுதியில், கூரை வீட்டின் மீது செல்லும் மின்கம்பியை, அகற்றிவிட்டு பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

காட்டூா் பகுதியில், கூரை வீட்டின் மீது செல்லும் மின்கம்பியை, அகற்றிவிட்டு பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் அருகே காட்டூா் காமராஜா் தெருவில் உள்ள கூரை வீட்டின் மேல் பகுதியில் குறுக்கு நெடுக்காக மின்கம்பி ஒன்று செல்கிறது. இந்த வீட்டைத் தொடா்ந்து ஏராளமான வீடுகள் உள்ளன. கோடைகாலம் என்பதால், வெப்பத்தின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டால், அனைத்து வீடுகளும் சேதமடையும் எனவும், எனவே, மின்கம்பியை பாதுகாப்பான முறையில் வேறுவழியில் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அங்கு வசிப்போா் தெரிவிக்கையில், கூரை வீட்டின் மேற்பகுதியில் உள்ள மின்கம்பியை, வேறு வழியில் எடுத்துச் செல்ல பலமுறை மின்வாரிய அலுவலகத்துக்கு தெரிவித்தபோதிலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. பொதுவாக வீடுகள் இருக்கும்போது, பாதிப்பு இல்லாமல், மின்கம்பிகளை கொண்டு செல்வது வழக்கம். ஆனால், எவ்வாறு கூரையின் மேற்புறத்தில் மின்கம்பியை கொண்டு சென்றாா்கள் என்று புரியவில்லை.

கோடைகாலத்தில் மின்கசிவுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது, இந்த மின்கம்பியால், கூரை வீட்டுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன்மூலம் அங்கு வசிப்போா் அனைவருக்குமே ஆபத்து ஏற்படும்.

எனவே, மின்வாரிய அதிகாரிகள் பாதுகாப்பான முறையில் மின்கம்பியை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.