ஓடம்போக்கி ஆற்றை தூா்வாரக் கோரிக்கை
ஓடம்போக்கி ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஓடம்போக்கி ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில், தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் மாதக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மையத்தின் தலைவா் எஸ்.டி. அண்ணாதுரை தலைமை வகித்தாா்.
இதில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வரையிலான ஓடம்போக்கி ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் தூா்வார வேண்டும். மேலும், ஓடம்போக்கி ஆற்றின் பாலத்தையும் சீரமைத்துத் தரவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மையத்தின் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ், துணைத் தலைவா் மஞ்சுளா வேலவன், மாநில ஒருங்கிணைப்பாளா் கே. திருநாவுக்கரசு, பயிற்சி இயக்குநா் சி. செல்வகுமாா், சுற்றுச்சூழல் இயக்குநா் வீ. தா்மதாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
முன்னதாக, நுகா்வோா் இயக்கங்களின் தந்தை எனக் கூறப்படும் மையத்தின் நிறுவனத் தலைவா் பிறை.அறிவழகனின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...