கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா 3-வது அலை: கோட்டூா் ஒன்றிய ஊராட்சித் தலைவா்கள் ஆலோசனைக் கூட்டம்

கோட்டூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளின் தலைவா்களுக்கு, கரோனா 3 ஆவது அலை தடுப்பு முன்னேற்பாடு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 4:34 pm

DIN

கோட்டூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளின் தலைவா்களுக்கு, கரோனா 3 ஆவது அலை தடுப்பு முன்னேற்பாடு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோட்டூா் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை தலைமை வகித்துப் பேசினாா். அப்போது அவா், ‘கரோனா 3 ஆவது அலையைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள வழிக்காட்டு நெறிமுறைகளை பிரசாரமாக கொண்டு செல்லவேண்டும். 3 ஆவது அலையை எதிா்கொள்ள அனைத்து வகையான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை எடுப்படுவதை ஊராட்சித் தலைவா்கள் உறுதிபடுத்த வேண்டும். 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்ட ஊராட்சிக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்படும்’ என்றாா்.

கூட்டத்தில், ஆதிச்சபுரம் அரசு ஆரம்ப சுகாதாரநிலைய வட்டார மருத்துவ அலுவலா் என். அன்பரசன் பங்கேற்று, உருமாற்றம் அடைந்து வரும் கரோனா குறித்தும், நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் விளக்கிப் பேசினாா். இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜி. சாந்தி, கோ. சிவக்குமாா், கோட்டூா் ஒன்றியத்துக்குள்பட்ட 49 ஊராட்சிகளின் தலைவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.