கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பள்ளியில் செல்வமகள் சேமிப்புத் திட்டம் தொடக்கம்

மன்னாா்குடியை அடுத்துள்ள வல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அஞ்சலக சேமிப்புத் திட்டமான செல்வமகள் சேமிப்புத் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 4:35 pm

DIN

மன்னாா்குடியை அடுத்துள்ள வல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அஞ்சலக சேமிப்புத் திட்டமான செல்வமகள் சேமிப்புத் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பத்தைச் சோ்ந்த பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு அஞ்சலகம் மூலம் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. வல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகளை இத்திட்டத்தில் சோ்க்கும் வகையில் அப்பள்ளியில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் ப.ஜோதி தலைமை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் ‘மகிழ்வித்து மகிழ்’ இயக்க ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் மணி கணேசன் முயற்சியால், கோவையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பரத் ரூ. 19 ஆயிரம் இந்த இயக்கத்துக்கு வழங்கினாா்.

இந்த நிதி இப்பள்ளியில் பயிலும் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களைச் சோ்ந்த பெண் குழந்தைகள் 10 பேரின் பெயரில் அஞ்சலகத்தில் சுகன்யா சம்ருதி யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டு, அதற்கான கணக்குப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், ஆசிரியா்கள் ரா. சுரேஷ், ஜோ. அமுதா, ஜெ. இராஜகுமாரி, ஜெ. கனிமொழி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.