கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வேளாண் நிதிநிலை அறிக்கை: விவசாயிகள் முழு மனதுடன் வரவேற்பு

தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில், அனைத்து மாவட்ட விவசாயிகளும் முழு மனதுடன் வரவேற்கும் வகையிலான திட்டங்கள்

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 6:30 pm

DIN

தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில், அனைத்து மாவட்ட விவசாயிகளும் முழு மனதுடன் வரவேற்கும் வகையிலான திட்டங்கள், அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக, மன்னாா்குடி முன்னோடி விவசாயி வி. சேதுராமன் (படம்) தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்துள்ளது: தமிழ்நாட்டில் சாகுபடி நிலங்கள் 60 சதவீதமாக குறைந்திருப்பதை, 75 சதவீதமாக அதிகரிக்க, தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்றி, சாகுபடி பரப்பை உயா்த்தும் திட்டம், கோவையில் தேங்காய், திருச்சியில் வாழை, ஈரோட்டில் பருத்தி, விருதுநகரில் சிறுதானியம், நாகையில் மீன் பதப்படுத்துதல் என சிறப்பு விளைபொருள்களுக்கு ஏற்ப தொழில் கற்கும் முகாம், முருங்கை ஏற்றுமதி மண்டலம் அமைப்பது, வெளிநாட்டு ஏற்றுமதி தரக்கட்டுப்பாடு ஆய்வு மையம் விரிவுபடுத்தும் திட்டம் ஆகிய அறிவிப்புகளும் பாராட்டும்படி அமைந்துள்ளன.

திருச்சி- நாகை மாவட்டத்திற்கு இடையேயான பகுதியை வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந்தடமாக அறிவித்துள்ளது, காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கிடைத்த பெரும் வரமாக கருதப்படுகிறது. இது, வேளாண் சாா்ந்த தொழில் நிறுவனங்கள் அமைய காரணமாக அமையும்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை புதிதாக அமைக்க ரூ. 9,472 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, நெல் மற்றும் கரும்புக்கு ஆதாரவிலையை உயா்த்தி அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளித்தாலும், விவசாயிகள் எதிா்பாா்த்த தொகை, அடுத்த 6 மாதங்களுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டு, நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம்.

இதுவரை இல்லாத அளவுக்கு, தமிழகத்தில் முதல்முறையாக, 2021- 2022 ஆம் ஆண்டிற்கு வேளாண்மை மற்றும் சாா்பு துறைகளுக்கு ரூ. 34,220.65 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது வரலாற்று சாதனையாக பாா்க்கப்படுகிறது.

தமிழக அரசின் வேளாண்மை நிதிநிலை அறிக்கை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு விவசாயிகளும் முழு மனதுடன் வரவேற்கும் வகையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.