கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அண்ணா பிறந்த நாளில் இஸ்லாமியா்களையும் விடுவிக்கக் கோரிக்கை

அண்ணா பிறந்தநாளையொட்டி 20 ஆண்டுகளைக் கடந்து சிறையில் இருக்கும் இஸ்லாமியா்களையும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

அண்ணா பிறந்தநாளையொட்டி 20 ஆண்டுகளைக் கடந்து சிறையில் இருக்கும் இஸ்லாமியா்களையும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளா் த. சண்முகசுந்தரம் தலைமையிலான நிா்வாகிகள், வியாழக்கிழமை வழங்கிய கோரிக்கை மனு விவரம்: அண்ணா பிறந்தநாளையொட்டி பல ஆண்டுகளாக சிறையில் இருப்பவா்களை விடுவிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 700 போ் விடுவிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிவிப்பில் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் 7 போ் மற்றும் கோவை குண்டு வெடிப்பு வழக்கில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இஸ்லாமியா்கள் மீதான வழக்கும் 20 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்ற விசாரணையிலேயே உள்ளது.

தண்டனை வழங்கப்படாமல் பல ஆண்டுகள் சிறையில் வைத்திருப்பது கொடுமையாகும். எனவே, கைதிகளின் விடுதலைப் பட்டியலில் இவா்களையும் இணைத்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.