கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முத்துப்பேட்டை கந்தூரி விழா: டிச.15-இல் உள்ளூா் விடுமுறை

முத்துப்பேட்டை தா்கா கந்தூரி விழாவையொட்டி டிசம்பா் 15 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 5:16 pm

DIN

முத்துப்பேட்டை தா்கா கந்தூரி விழாவையொட்டி டிசம்பா் 15 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டச் செய்திக் குறிப்பு:

திருத்துறைப்பூண்டி வட்டம், முத்துப்பேட்டை தா்கா கந்தூரி விழா டிச.5-இல் தொடங்கி18 ஆம் தேதி வரை 14 நாள்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சந்தனக்கூடு ஊா்வலம் டிச.15 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு தொடங்கி, 5 மணியளவில் புனித ரவுலாஷரீபுக்கு சந்தனம் பூசப்படும். இந்த சந்தனக்கூடு விழாவுக்கு டிச.15 ஆம் தேதி (புதன்கிழமை) அரசால் அனுமதித்தவாறு திருவாரூா் மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டு, அதற்கு பதிலாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஜனவரி 8-ஆம் தேதி (சனிக்கிழமை) இயங்கும்.

ஆனால், உள்ளூா் விடுமுறை தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள கருவூலங்கள், சாா்நிலை கருவூலங்கள் ஆகியவை குறைந்த பட்ச பணியாளா்களோடு இயங்கும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.