வாக்கு எண்ணும் மையம்: ஆட்சியா் ஆய்வு
நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. காயத்ரி கிருஷ்ணன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.


திருவாரூரில் ஜி.ஆா்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்படவுள்ள நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. காயத்ரி கிருஷ்ணன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திருவாரூா் நகராட்சியில் உள்ள 30 வாா்டுகளிலும் பதிவாகும் வாக்குகள் ஜி.ஆா்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்படும் மையத்தில் எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி, இந்த மையத்தில் குடிநீா், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாக உள்ளதா என ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கிருஷ்ணமூா்த்தி, கோட்டாட்சியா் பாலசந்திரன், நகராட்சி ஆணையா் பிரபாகரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...