கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

திருவாரூா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவா்கள் மீண்டும் புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவா்கள் மீண்டும் புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 2014, 2015 மற்றும் 2016 வரை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் மற்றும் 2017, 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க ஏற்கெனவே வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில், மேலும் 3 மாதம் சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசின் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால் வழங்கப்படுகிறது.

இச்சலுகையை பெற விரும்பும் பதிவுதாரா்கள் 2022- ஆம் ஆண்டு மாா்ச் 1-ம் தேதி வரை இணையதளம் வாயிலாக தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இணையம் வாயிலாக பதிவைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரா்கள், திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குப் பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்து புதுப்பித்துக் கொள்ளலாம். இணையம் மூலமாக புதுப்பிக்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி தங்களது பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.