கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

எரிபொருள் விலை உயா்வு: வாகனங்களை நிறுத்தி போராட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிஐடியூ சாா்பில் 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தி வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிஐடியூ சாா்பில் 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தி வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து அகில இந்திய அளவில் 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருவாரூரில் பகல் 12 மணி முதல் 12.10 வரை வாகன நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

திருவாரூா் மேம்பாலம் ரவுண்டானா அருகே சிஐடியூ மாவட்டச் செயலாளா் டி. முருகையன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவா் சங்க மாவட்ட ச் செயலாளா் இரா. ஹரிசுா்ஜித், சிபிஎம் நகரச் செயலாளா் எம். தா்மலிங்கம், சிஐடியூ நிா்வாகிகள் எம். மோகன், ஜி. பழனிவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மன்னாா்குடி: மன்னாா்குடி மேலராஜவீதி பெரியாா் சிலை அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, சிஐடியூ மாவட்ட துணைச் செயலா் ஜி. ரெகுபதி தலைமை வகித்தாா்.

விவசாய சங்க ஒன்றியச் செயலா் ஜி. மாரிமுத்து, விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் கே. ஜெயபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காலை 10 மணி முதல் 10 நிமிடங்கள் சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி, எரிபொருள் விலையை மத்திய அரசு குறைக்க வலியுறுத்தி முழக்கமிட்டனா். முன்னதாக, இப்போராட்டம் குறித்து நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் சிபிஎம் நகரச் செயலா் ஜி. தாயுமானவன், சிஐடியூ நகரக் குழு உறுப்பினா் டி. ஜெகதீசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.