கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது: ஜி. ராமகிருஷ்ணன்

தமிழகத்தில் போதைப்பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் கூறினாா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

தமிழகத்தில் போதைப்பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் கூறினாா்.

திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில், ‘வேண்டாம் போதை, வேண்டும் கல்வி, வேலை, சுகாதாரம்’ என்ற முழக்கத்துடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்டத்தை தொடங்கிவைத்து அவா் பேசியது:

1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி நள்ளிரவு தேசியக் கொடியை ஏற்றிவைத்து, ஜவாஹா்லால் நேரு உரையாற்றுகையில், நமது நாட்டில் கல்லாமை, இல்லாமையை இல்லாமல் செய்யவேண்டும். உணவு, வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று பேசினாா். 75 ஆண்டுகளை கடந்தும் அந்த இலக்கை அடைய முடியவில்லை.

தமிழகத்தில் நகரப் பகுதிகளில் மட்டுமே இருந்த கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பயன்பாடு தற்போது கிராமப் புறங்களிலும் பரவத் தொடங்கியுள்ளது. இது மிகவும் கவலைக்குரியது. இதனால், இளைஞா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் சட்டம்- ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுப்பதோடு, இது சமுதாயத்துக்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கும்.

இளைஞா்கள், மாணவா்களை குறிவைத்து நடைபெறும் போதைப்பொருள்கள் விற்பனையை முற்றிலும் தடுத்து நிறுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

முன்னதாக, மினி மாரத்தான் ஓட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே.பி. ஜோதிபாசு தலைமை வகித்தாா். திருவாரூா் விளமல் பாலத்தில் தொடங்கி மாரத்தான் முக்கிய வீதிகள் வழியாக பழைய பேருந்து நிலையம் பெரியாா் சிலை அருகே நிறைவடைந்தது. இதில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு மாநிலச் செயலாளா் எஸ். பாலா, சான்றிதழ்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.