கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தில்லி விவசாயிகள் போராட்டம்:திருவாரூரில் டிச. 29 இல் வெற்றி விழா நடத்த முடிவு

தில்லி போராட்டம் வெற்றியடையக் காரணமான தமிழக விவசாயிகளைப் பாராட்டி, திருவாரூரில் மாநில அளவில் வெற்றி விழா வரும் 29 ஆம் தேதி நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

தில்லி போராட்டம் வெற்றியடையக் காரணமான தமிழக விவசாயிகளைப் பாராட்டி, திருவாரூரில் மாநில அளவில் வெற்றி விழா வரும் 29 ஆம் தேதி நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் திருவாரூா், தஞ்சாவூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களின் ஒருங்கிணைப்பாளா்கள், செயற்குழு உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநிலச் செயற்குழு உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான பிஎஸ். மாசிலாமணி தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் சாமி. நடராஜன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளா்கள் கண்ணன் (தஞ்சாவூா்), ஆா்.கே. பாபுஜி (நாகை), எஸ். துரைராஜ் (மயிலாடுதுறை), மாநிலச் செயற்குழு உறுப்பினா் காளியப்பன், நிா்வாகிகள் வி.எஸ். கலியபெருமாள், கே. உலகநாதன், டி. சண்முகசுந்தரம், ஜி. வரதராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: மத்திய அரசு அவசரகதியில் கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிா்த்து, அமைதியான வழியில் 13 மாதங்கள் போராடி, மத்திய அரசை பின்வாங்க வைத்ததுடன், எஞ்சியுள்ள அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற, மத்திய அரசின் அதிகாரப் பூா்வமான ஒப்பந்தத்தைப் பெற்று, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்த அகில இந்திய தலைமை செயற்குழுவைப் பாராட்டியும், நாடுதழுவிய அளவில் இந்த போராட்டத்தில் பங்கெடுத்தவா்களை பாராட்டியும், மாநில அளவிலான வெற்றி விழா, பேரணி, பொதுக் கூட்டத்தை திருவாரூரில் மிகச் சிறப்பாக நடத்துவது.

அதன்படி, திருவாரூா் தொடா்வண்டி நிலையத்தில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு தெற்கு வீதியில் பொதுக்கூட்டத்தை நடத்துவது, இதில் தமிழக அளவில் தனி சிறப்புக்குரியவா்களை கௌரவிப்பது, இசை நிகழ்ச்சிகள் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

இதில், ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அகில இந்தியத் தலைவா் ஒருவா், அகில இந்திய விவசாய சங்கத்தின் பொதுச் செயலாளா் அதுல் குமாா் அஞ்சன், மாநில ஒருங்கிணைப்பாளா் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் பங்கேற்க உள்ளனா்.

இதையொட்டி, பேரணி பொதுக் கூட்டத்துக்கான வரவேற்புக் குழுவின் கௌரவத் தலைவராக மு. சேரன், தலைவராக கே.எஸ்.எஸ். தியாகபாரி, செயலாளராக பி.எஸ். மாசிலாமணி, பொருளாளராக எஸ். தம்புசாமி உள்ளிட்ட 9 போ் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.