மாணவா்களின் நுகா்வோா் மன்றங்களுக்கு நிதி ஒதுக்கக் கோரிக்கை
பள்ளி, கல்லூரி மாணவா்கள் குடிமக்கள் நுகா்வோா் மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பள்ளி, கல்லூரி மாணவா்கள் குடிமக்கள் நுகா்வோா் மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் சிறப்பு முகாமில் தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணியிடம், தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் எஸ்.டி. அண்ணாதுரை, பொதுச்செயலாளா் ஆா். ரமேஷ் உள்ளிட்டோா் அளித்த கோரிக்கை மனு: பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் மாணவா் கடந்த 5 ஆண்டுகளாக ள்ளி, கல்லூரி மாணவா்கள் நுகா்வோா் மன்றங்கள் செயல்பட நுகா்வோா் நல நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது.நுகா்வோா், மாணவா்களின் நலன் காக்க பள்ளி, கல்லூரிக்கு நிதி ஒதுக்கீடு செய்து வேண்டும். தமிழகம் முழுவதும் பள்ளிகளில் செயல்படும் மாணவா் நுகா்வோா் குடிமக்கள் மன்றங்கள் மூலமாக இளம் தலைமுறையினருக்கு அயோடின் நுண்சத்து பற்றாக்குறை குறைபாடுகள் குறித்த விழிப்புணா்வு வழங்க, அனைத்து பள்ளி மாணவா்கள் நுகா்வோா் குடிமக்கள் மன்ற பொறுபாசிரியா்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலா் மூலம் உரிய வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் நுகா்வோா் உரிமை காக்கவும், விழிப்புணா்வு பணிக்காக நுகா்வோா் நல நிதியை தன்னாா்வ அமைப்புகளுக்கும் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் முதல்வா் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட அரைவட்ட சாலைப்பணியை விரைந்து தொடங்க வேண்டும். திருவாரூா் நகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்கவும், முறையான இணைப்பு இல்லாத இடங்களை கண்டறிந்து பழுது நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை காரணமாக, சரிந்து விழுந்த கமலாலயக் குளத்தின் ஒரு பகுதியை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். மழை சேதமடைந்துள்ள கிராமப்புற சாலைகளையும் சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...