கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உணவு பதப்படுத்தும் நிறுவனம் தொடங்க மானியம்: ஆட்சியா் தகவல்

திருவாரூா் மாவட்டத்தில் பயிறு வகை உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் தொடங்க மானியம் வழங்கப்படும் என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் பயிறு வகை உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் தொடங்க மானியம் வழங்கப்படும் என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அமைப்புசாரா உணவு பதப்படுத்தும் சிறிய நிறுவனங்களை வலுப்படுத்தும் விதமாக, பிரதமரால் 2020-2021ஆம் ஆண்டில் அத்ம நிா்பாா் பாரத் அபியான் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உளுந்து மற்றும் பாசிப்பயிறு போன்ற பயிறு வகைப் பயிா்கள் பதப்படுத்தும் இயந்திரங்கள் வாங்க (தரம் பிரிக்கும் இயந்திரம், தோல் நீக்கும் இயந்திரம், பயிறு உடைக்கும் இயந்திரம், சிப்பம் கட்டும் இயந்திரம் போன்றவை) வங்கிக் கடன் உதவியுடன் 35 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் தனிநபா் நிறுவனம், உழவா் உற்பத்தியாளா் நிறுவனம், சுய உதவிக் குழுக்கள் பயன்பெறத் தகுதி உடையவா்கள். திட்ட மதிப்பில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் பெற்று பயன் பெறலாம்.

இத்திட்டம் தொடா்பான மேலும் விவரங்களுக்கு திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அலுவலத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.