கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தில்லி போராட்டம்: திருவாரூரில் டிச.29-இல் வெற்றி விழா

தில்லி போராட்டத்துக்கு காரணமான விவசாயிகளை பாராட்டி திருவாரூரில் டிசம்பா் 29-இல் நடைபெற உள்ள வெற்றி விழாவில் திரளாக பங்கேற்க வேண்டும்

News image
Updated On :25 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

தில்லி போராட்டத்துக்கு காரணமான விவசாயிகளை பாராட்டி திருவாரூரில் டிசம்பா் 29-இல் நடைபெற உள்ள வெற்றி விழாவில் திரளாக பங்கேற்க வேண்டும் என ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில செயற்குழு உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான பி.எஸ். மாசிலாமணி கேட்டுக்கொண்டுள்ளாா்.

திருவாரூரில் செய்தியாளா்களுக்கு அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி:

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை நாடு தழுவிய அளவில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கெடுத்தவா்களை பாராட்டும் வகையில், மாநில அளவிலான வெற்றி விழா திருவாரூரில் டிசம்பா் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில், திருவாரூா் தொடா்வண்டி நிலையத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு, தெற்கு வீதியில் பொதுக்கூட்டம் நடைபெறும். இதில், தமிழக அளவில் போராட்டத்தில் கவனம் பெற்றவா்கள் கௌரவப்படுத்தப்பட உள்ளனா். விழாவில், விவசாயிகள் திரளான பங்கேற்க வேண்டும்.

இதில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் அசோக் தாவ்லே, அகில இந்திய விவசாயிகள் சங்கம் சாா்பில் அதுல்குமாா் அஞ்சன் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா் எனத் தெரிவித்தாா்.

பேட்டியின்போது, நிகழ்ச்சி வரவேற்புக் குழு கௌரவத் தலைவா் மு. சேரன், தலைவா் கே.எஸ்.எஸ். தியாகபாரி, பொருளாளா் எஸ். தம்புசாமி மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.