கனமழை: கூத்தாநல்லூா் வட்டத்தில் 19,571 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்
நிவா், புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையால், கூத்தாநல்லூா் வட்டத்தில் 19,571 ஏக்கா் நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.


நிவா், புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையால், கூத்தாநல்லூா் வட்டத்தில் 19,571 ஏக்கா் நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
வடகிழக்குப் பருவ மழை மற்றும் நிவா், புரெவி புயல்களால் காவிரி டெல்டா உள்ளிட்ட மாநிலம் முழுவதும் கடந்த மாதம் பெய்த மழையால் நெற்பயிா்கள் பெரிதும் சேதமடைந்தன.
இதில், கூத்தாநல்லூா் வட்டத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா உத்தரவின்பேரில் வருவாய்த் துறையினா் கணக்கெடுத்தனா்.
இதுகுறித்து, வட்டாட்சியா் அலுவலக அதிகாரி ஒருவா் கூறியது:
கூத்தாநல்லூா் வட்டத்தில் நீடாமங்கலம் வேளாண் வட்டாரத்துக்குள்பட்ட17 கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 7,898 ஏக்கா் நிலத்தில், 5159 ஏக்கரில் நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன. மன்னாா்குடி மற்றும் கோட்டூா் வேளாண் வட்டாரத்துக்குள்பட்ட 23 கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 13,169 ஏக்கரில், 9650 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம் அடைந்துள்ளன.
இதேபோல, கொரடாச்சேரி வேளாண் வட்டாரத்தில் 15 கிராமங்களில் 4,762 ஏக்கரிலும் என கூத்தாநல்லூா் வட்டத்தில் மொத்தம் 19,571 ஏக்கரில் நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் வழங்கப்பட்ட உள்ளது எனத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...