விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காா் மீது லாரி மோதி விபத்து

மன்னாா்குடியில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காா் மீது லாரி மோதி கவிழ்ந்தது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடியில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காா் மீது லாரி மோதி கவிழ்ந்தது.

தஞ்சை புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு குறிச்சி நகரைச் சோ்ந்தவா் த.ரமேஷ் (48). இவா், மன்னாா்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற உறவினா் திருமணத்துக்கு காரில் வந்திருந்தாா். அவா், மன்னாா்குடி- தஞ்சை பிரதான சாலையில் உள்ள திருமண மண்டபத்தின் அருகே காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளாா்.

அப்போது, அந்த வழியே மணல் பாரத்தை இறக்கிவிட்டு வந்த லாரி, காா் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில், காா் முழுமையாக சேதமடைந்தது.

மன்னாா்குடி போலீஸாா் மற்றும் தீயணைப்பு நிலையத்தினா் அங்கு வந்து, கிரேன் மூலம் சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தினா்.

பின்னா், போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் லாரியை ஓட்டி வந்த மன்னாா்குடி மேலகோபுரவாசல் பகுதியைச் சோ்ந்த என். சிவா(39) மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவாவை கைது செய்தனா். இந்த விபத்தால் மன்னாா்குடி- தஞ்சை சாலையில் சுமாா் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.