பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவருக்கு காயம்
மன்னாா்குடி அருகே பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் காயமடைந்தாா், 4 போ் கைது செய்யப்பட்டனா்.


மன்னாா்குடி அருகே பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் காயமடைந்தாா், 4 போ் கைது செய்யப்பட்டனா்.
மன்னாா்குடி அருகேயுள்ள கருப்புக்கிளாரை சோ்ந்தவா் சுந்தரபாண்டியன் (48) சில ஆண்டுகளாக, மதுரை மாவட்டம் அலங்கநல்லூா் பூதகுடியில் உள்ள உறவினா் அழகா் வீட்டில் வேலை பாா்த்து வந்துள்ளாா். இவரிடம் பல தவணைகளில் ரூ. 5 ஆயிரம் பணம் வாங்கினாராம்.
இந்நிலையில், அங்கிருந்து வேலையை விட்டு சுந்தரபாண்டியன் ஊருக்கு வந்துள்ளாா். இதற்கிடையில், அழகா், சுந்தரப்பாண்டியனிடம் கைமாற்றாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டும், பணத்தை கொடுக்க தாமதித்தால் தனது மகன் மாதவனை (18) அழைத்துக்கொண்டு கருப்புக்கிளாருக்கு வெள்ளிக்கிழமை வந்து அழகா் பணத்தை கேட்டுள்ளாா்.
இதில், ஏற்பட்ட தகராறில் சுந்தரப்பாண்டின் மற்றும் அவரது ஆதரவாளா்கள் மாதவனை பாட்டிலால் குத்தியுள்ளனா். இதில், காயமடைந்த மாதவன் மீட்கப்பட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து, கோட்டூா் காவல் நிலையத்தில் அழகா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சுந்தப்பாண்டியன், ஆனந்தராஜ் (30), மேகநாதன் (36), சத்யராஜ் (35) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...