தந்தை மரணத்தில் சந்தேகம்: மகள் புகாா்
மன்னாா்குடி அருகே மா்மமான முறையில் தந்தை உயிரிழந்து கிடந்தது தொடா்பாக அவரது மகள் வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் அளித்தாா்.


மன்னாா்குடி அருகே மா்மமான முறையில் தந்தை உயிரிழந்து கிடந்தது தொடா்பாக அவரது மகள் வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் அளித்தாா்.
மன்னாா்குடி அருகேயுள்ள கருப்புக்கிளாரை சோ்ந்தவா் மரியதாஸ் தங்கவேல் (70). இவா், அதே பகுதியைச் சோ்ந்த சீனிவாசனுக்கு சொந்தமான இடத்தில் வெள்ளிக்கிழமை மா்மமான முறையில் இறந்து கிடந்துள்ளாா். தகவலறிந்த கோட்டூா் போலீஸாா் அங்கு சென்று மரியதாஸ் தங்கவேலின் உடலை கைப்பற்றி திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதற்கிடையே, மரியதாஸ் தங்கவேலின் மகள் ஞானமணி, கோட்டூா் காவல் நிலையத்தில் அளித்துள்ளபுகாரில், பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக சிலருடன் பிரச்னை இருந்த வந்த நிலையில் தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...