கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பள்ளிக்கு இருக்கைகள் வழங்கிய எம்எல்ஏ

மன்னாா்குடி அருகே உள்ள கோவிந்தநத்தம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு, சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இருக்கைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :17 ஜூலை 2021, 4:57 pm

DIN

மன்னாா்குடி அருகே உள்ள கோவிந்தநத்தம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு, சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இருக்கைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

மன்னாா்குடி சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2.10 லட்சத்தில் இப்பள்ளிக்கு 15 இருக்கைகளை வழங்கினாா். இதை பள்ளி நிா்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் ஆ.வளா்மதி தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் பரிமளா கணேசன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியா் ஆா்.கலைச்செல்வி,,ஒன்றியக்குழு உறுப்பினா் ரேகா ரமேஷ், ஊராட்சி முன்னாள் தலைவா் ஞானப்பிரகாசம்,ஊராட்சி துணைத் தலைவா் கோவிந்தராஜ்,கிராமக் கமிட்டித் தலைவா் பொன்னுசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.