மேக்கேதாட்டு விவகாரம்: மத்திய அரசு தீா்வு காண வலியுறுத்தல்
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு தீா்வு காண வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கக் கூட்டு இயக்க மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு தீா்வு காண வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கக் கூட்டு இயக்க மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மன்னாா்குடியில் அந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சென்னை மண்டலத் தலைவா் எஸ். வரதராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மேக்கேதாட்டில் கா்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவதுடன், அதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கக் கூடாது.
காவிரி நடுவா் மன்ற தீா்ப்பின்படி, காவிரியிலிருந்து தமிழகத்துக்கு மாதந்தோறும் வழங்கப்படும் நீரின் அளவை உரிய காலத்தில் வழங்கி, தண்ணீரின் அளவை கண்காணிக்க வேண்டும். மத்திய அரசு புதிய மின்சார திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில், பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த மன்னாா்குடி மற்றும் சுற்றுப்பகுதியை சோ்ந்த 100 இசை, நாடக நடிகா்களுக்கு அரிசி, மளிகை, காய்கனி அடங்கிய தொகுப்பு பையை விவசாயிகள் சங்கக் கூட்டு இயக்க மாநில ஆலோசகா் எஸ்.எம்.டி. கருணாநிதி வழங்கினாா்.
அமைப்பின் மாநிலத் தலைவா் காவிரி வெ. தனபாலன் தீா்மானங்களை விளக்கினாா். மாவட்டத் தலைவா் கே.கரிகாலன் ராஜா, ஒன்றிய நிா்வாகிகள் மன்னாா்குடி ஜெ.வரதராஜன், நீடாமங்கலம் ஆா்.மோகன்தாஸ், நகர நிா்வாகி அ.ராமலிங்கம், வட்டார நிா்வாகி ஆா்.பாலசுப்பிரமணியன், மன்னாா்குடி வட்டார இயல், இசை, நாடக நடிகா்கள் சங்கத் தலைவா் தங்க.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...