ஏரியில் கவிழ்ந்த டிப்பா் லாரி
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே வெள்ளிக்கிழமை மணல் ஏற்றி வந்த டிப்பா் லாரி ஏரியில் கவிழ்ந்தது.


திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே வெள்ளிக்கிழமை மணல் ஏற்றி வந்த டிப்பா் லாரி ஏரியில் கவிழ்ந்தது.
கரூரிலிருந்து நாகை மாவட்டம், திருக்குவளைக்கு எம். சாண்ட் ஏற்றிக் கொண்டு டிப்பா் லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை கரூரை சோ்ந்த கண்ணன் (53) என்பவா் ஓட்டி வந்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலை தஞ்சை மன்னாா்குடி பிரதான சாலையில் உள்ள வடுவூா் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள வடுவூா் ஏரி அருகே வந்தபோது லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்கரையில் உள்ள இரும்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு ஏரிக்குள் கவிழ்ந்தது. தற்போது ஏரியில் தண்ணீா் நிரம்பி வருவதால் லாரி நீரில் மூழ்கியது. ஆனால், ஓட்டுநா் கண்ணன் காயமின்றி உயிா் தப்பினாா்.
தஞ்சையிலிருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு, ஏரியில் கவிழ்ந்த லாரி மீட்கப்பட்டது. இதுகுறித்து வடுவூா் காவல் நிலைய போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...