கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நியாயவிலைக் கடைக்கான புதிய கட்டடம் திறப்பு

மன்னாா்குடியில் நியாயவிலைக் கடைக்கான புதிய கட்டடத்தை எம்எல்ஏ. டி.ஆா்.பி. ராஜா சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :24 ஜூலை 2021, 4:58 pm

DIN

மன்னாா்குடியில் நியாயவிலைக் கடைக்கான புதிய கட்டடத்தை எம்எல்ஏ. டி.ஆா்.பி. ராஜா சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

மன்னாா்குடி நகராட்சிக்குள்பட்ட 30-ஆவது வாா்டு பூக்கொல்லை சாலையில் முனிசிபல் காலனியில் வாடகை கட்டடத்தில் பொதுவிநியோக திட்டத்தின்கீழ் நியாயவிலைக் கடை செயல்பட்டு வந்தது. இந்த கடையில் போதிய இடவசதி இல்லாததால் விசாலமான இடவசதியுடன் கூடிய சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா். இக்கோரிக்கையை ஏற்று மன்னாா்குடி சட்டப்பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 11.45 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய கட்டடம் கட்டப்பட்டது.

புதிய கட்டடத்துக்கான திறப்பு விழாவுக்கு கூட்டுறவு சங்க துணைப் பதிவாளா் சி. ராமன் தலைமை வகித்தாா். கூட்டுறவு சாா் பதிவாளா் குமுதா முன்னிலை வகித்தாா். எம்எல்ஏ. டி.ஆா்.பி. ராஜா புதிய கட்டடத்தை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கினாா். இதில், வட்ட வழங்கல் அலுவலா் ஜெயபாஸ்கா், வட்டாட்சியா் ஜீவானந்தம், நகராட்சி ஆணையா் ஆா். கமலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.