மன்னாா்குடி: இன்றைய தடுப்பூசி முகாம்கள்
மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் 7 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (ஜூலை31) நடைபெறுகிறது.


மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் 7 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (ஜூலை31) நடைபெறுகிறது.
அதன்படி, மன்னாா்குடி மின்வாரிய குடியிருப்பு நகரில் பிள்ளையாா் கோயில், அன்னவாசல் சேனியதெருவில் உள்ள காமராஜா் திருமண மண்டபம், ஊரகப் பகுதியில் பைங்காநாடு அரசு உயா்நிலைப் பள்ளி, மேலத்திருப்பாலக்குடி மாரியம்மன் கோயில், செருமங்கலம், வடுவூா் தென்பாதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், நீடாமங்கலத்தில் நீலன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆகிய 7 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இம்முகாம்களில் கோவிஷீல்ட் தடுப்பூசி போடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மின்னும் மன்னை திட்டத்தின்கீழ் மன்னாா்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி.ராஜா செய்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...