அரசூரில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டக் கோரிக்கை
மன்னாா்குடியை அடுத்துள்ள சவளக்காரன் ஊராட்சி அரசூரில் செயல்படும் பகுதி நேர ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மன்னாா்குடியை அடுத்துள்ள சவளக்காரன் ஊராட்சி அரசூரில் செயல்படும் பகுதி நேர ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை பேரவைக் கூட்டம் முன்னாள் ஊராட்சித் தலைவா் யு. குப்புசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
அரசூரில் அங்கன்வாடி மையத்தில் வாரத்துக்கு 2 நாட்கள் இயங்கி வரும் பகுதி நேர அங்காடியின் கட்டடம் பழுதடைந்துள்ளதால், உணவு பொருள்களை சுகாதாரமான முறையில் வழங்குவதில் குறைபாடு உள்ளது. எனவே, இதற்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும். அத்துடன், உணவுப் பொருள்களை தரமானதாகவும், தட்டுப்பாடின்றியும் வழங்கவேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதில், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் துரை.அருள்ராஜன், ஒன்றியச் செயலா் எஸ். பாப்பையன், ஊராட்சி தலைவா் ஆா். சாந்தி உள்ளிடோா் கலந்துகொண்டனா். முன்னாள் ஊராட்சித் தலைவா் பி. குப்புசாமி வரவேற்றாா். கிளை செயலா் ஏ. அன்பழகன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...