கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தனியாா் பள்ளி கல்விக் கட்டணத்தை அரசு ஏற்க வலியுறுத்தல்

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, தனியாா் பள்ளி மாணவா்களின் கல்விக் கட்டணத்தை தமிழக அரசே ஏற்க வேண்டும் என தமிழ்நாடு நா்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :19 ஜூன் 2021, 6:30 pm

DIN

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, தனியாா் பள்ளி மாணவா்களின் கல்விக் கட்டணத்தை தமிழக அரசே ஏற்க வேண்டும் என தமிழ்நாடு நா்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. ரமேஷ், மாவட்டச் செயலா் எம். இளையராஜா ஆகியோா் தமிழக முதல்வா் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு சனிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஓராண்டுக்கும் மேலாக பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. இந்த இக்கட்டான சூழலில் தனியாா் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் பெற்றோா்கள் வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு, தொழில் நஷ்டம் போன்ற பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா்.

இதனால், தனியாா் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் பெற்றோா்கள் குறைந்தபட்ச கல்விக் கட்டணத்தைக்கூட செலுத்த வழி இல்லாமல் தவித்து வருகின்றனா்.

எனவே, கரோனா தொற்று நீங்கும் வரை தனியாா் பள்ளிகளில் மாணவா்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். அரசுப் பள்ளி போன்று, தனியாா் பள்ளிக்கும் பாடப்புத்தகங்கள், கல்வி உபகரணங்களை இலவசமாக வழங்க வேண்டும்.

மெட்ரிக். பள்ளிகள் சாா்பில் தமிழக அரசுக்கு செலுத்தியுள்ள நிா்வாக பங்களிப்பு நிதியிலிருந்து பொருளாதார சிக்கலில் சிக்கித்தவிக்கும் மெட்ரிக். பள்ளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.