கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தோ்தல் விழிப்புணா்வு: திருவாரூரில் காவல்துறை கொடி அணிவகுப்பு

திருவாரூரில் 100 சதவீத வாக்களிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

திருவாரூரில் 100 சதவீத வாக்களிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் புதிய ரயில் நிலையத்தில் தொடங்கிய கொடி அணிவகுப்புக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே. சாந்தா தலைமை வகித்து பேசியது:

சட்டப்பேரவைத் தோ்தலில் ஜனநாயக கடமையாற்றும் வகையில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், அமைதியான முறையில் வாக்கெடுப்பு நடைபெறும் என்பதை வலியுறுத்தியும், பொதுமக்கள் அனைவரும் கையூட்டு பெறாமல் அச்சமின்றி, நோ்மையான முறையில் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் காவல்துறையின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது என்றாா்.

அணிவகுப்புக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி முன்னிலை வகித்தாா். அணிவகுப்பானது, திருவாரூா் புதிய ரயில் நிலையத்தில் தொடங்கி நேதாஜி சாலை, தெற்கு வீதி வழியாக நகராட்சி அலுவலக வளாகம் வரை நடைபெற்றது.

நிகழ்வில், கோட்டாட்சியா் என்.பாலச்சந்திரன், வட்டாட்சியா் நக்கீரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், காவல்துறையினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.