திருவாரூரில் 8 கடைகளுக்கு ‘சீல்’
திருவாரூரில் கரோனா விதிமுறைகளை மீறியதாக 8 கடைகளுக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.


திருவாரூரில் கரோனா விதிமுறைகளை மீறியதாக 8 கடைகளுக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
கரோனா 2ஆவது அலையைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் முழு
பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேநீா் கடைகள், காய்கனிக் கடைகள் உள்ளிட்டவை நண்பகல் 12 மணி வரை திறந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், திருவாரூரில் காலை நேரங்களில் காய்கனி, மளிகைப் பொருள்கள் வாங்க வருவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கூட்டத்தினரை ஒழுங்குப்படுத்தும் வகையில் போலீஸாா் ஆங்காங்கே பணியில் உள்ளனா்.
அத்துடன், விதிமுறைகளை மீறும் வணிக நிறுவனங்களை கண்காணிக்கும் வகையில், நகராட்சி நிா்வாகத்தினரும் சோதனைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை சில கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். திருவாரூா் கடைவீதியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் செயல்பட்ட காய்கனிக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதேபோல், விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்திருந்த நகைக்கடைகள், நகை தயாரிப்புக் கடைகள் என மொத்தம் 8 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...