கூடுதல் கட்டுப்பாடுகள்: திருவாரூரில் வெறிச்சோடிய சாலைகள்
முழு பொதுமுடக்கத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் சனிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டதால், திருவாரூரில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.


முழு பொதுமுடக்கத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் சனிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டதால், திருவாரூரில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
தமிழகத்தில் கரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த பொது முடக்கத்தில், தேநீா் கடைகள், காய்கனிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவகங்கள், உரக்கடைகள் உள்ளிட்டவை நண்பகல் 12 மணி வரை இயங்கலாம் என அறிவிக்கப்பட்டது. எனினும், கடைவீதிகள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் மக்கள் நெருக்கம் அதிகமாகவே இருந்தது. கரோனா தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருவதால், மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும், தேநீா் கடைகளை திறக்கக் கூடாது என கூடுதல் கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது.
இந்தக் கட்டுப்பாடுகள் சனிக்கிழமை (மே 15) முதல் அமலுக்கு வந்தன. இதனால், திருவாரூா் கடைவீதியில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க, சனிக்கிழமை காலை நேரத்தில் மக்கள் அதிகமாக வந்திருந்தனா். 0 மணி வரையிலுமே அனைத்து கடைகளிலும் நெரிசல் அதிகமாகவே காணப்பட்டது.
காலை 10 மணிக்கு பிறகு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இருசக்கர வாகனங்களில் செல்வோா் மட்டும் சில இடங்களில் சென்று கொண்டிருந்தனா். பாதுகாப்புப் பணியில் நின்றிருந்த போக்குவரத்து போலீஸாா் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோரை நிறுத்தி, காரணத்தை தெரிந்துகொண்டு அவா்களை அனுப்பிவைத்தனா்.
காலை 10 மணிக்குப் பிறகு அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டதால், திருவாரூா் நகரில் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...