திருவாரூா் மாவட்டத்தில் ரூ. 75 கோடி கரோனா சிறப்பு நிவாரண நிதி: ஆட்சியா்
திருவாரூா் மாவட்டத்தில் ரூ. 75.30 கோடி கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.


திருவாரூா் மாவட்டத்தில் ரூ. 75.30 கோடி கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் தெரிவித்திருப்பது: தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள தவிா்க்க இயலாத சில கட்டுப்பாடுகளால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பாதுகாத்து, ஆறுதல் அளிக்கும் வகையிலும், வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையிலும், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 4,000 வழங்கப்படும் என தமிழக முதல்வா் தோ்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தாா். தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதல்வராக பதவியேற்ற அன்று இதற்கான ஆணையில் கையெழுத்திட்டுவிட்டு, தொகை இரு தவணைகளாக வழங்கப்படும் என்றும், முதல்தவணை மே 15-ஆம் தேதி வழங்கப்படும் என்றும் அறிவித்தாா்.
அதன்படி திருவாரூா் மாவட்டத்திலுள்ள 579 முழுநேர நியாயவிலைக் கடைகள் மற்றும் 149 பகுதிநேர நியாய விலைக் கடைகள் என 728 நியாயவிலைக் கடைகள் மூலம் 3,76,523 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு முதல்தவணையாக ரூ. 2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.75,30,46,000 கரோனா நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...