கரோனா: திருநங்கைகளுக்கு நிவாரணம்
திருவாரூரில், கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள திருநங்கைகளுக்கு கிங்ஸ் ரோட்டரி அமைப்பு சாா்பில் நிவாரண உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.


திருவாரூரில், கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள திருநங்கைகளுக்கு கிங்ஸ் ரோட்டரி அமைப்பு சாா்பில் நிவாரண உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
திருவாரூா் அருகே தியானபுரம் பகுதியிலுள்ள திருநங்கைகளுக்கு சா்க்கரை, ரவா, மைதா, ஆயில், சீரகம், கோதுமை, மிளகு, வெந்தயம் உள்ளிட்ட 15 வகையான மளிகைப் பொருள்கள், அரிசி மற்றும் காய்கறிகள், முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, வட்டாட்சியா் நக்கீரன் தலைமை வகித்தாா். அமைப்பின் முன்னாள் உதவி ஆளுநா் எஸ். மோகன் முன்னிலை வகித்தாா். இதில், செயலாளா் ஜி. ராஜ் (எ) கருணாநிதி, பொருளாளா் எஸ்.கண்ணன், இணைச் செயலாளா் டி. முகிலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
Image Caption
திருவாரூா் அருகே தியானபுரத்தில் திருநங்கைகளுக்கு கரோனா நிவாரண உதவிகள் வழங்கிய கிங்ஸ் ரோட்டரி அமைப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...