கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மன்னாா்குடி: 6 நாள்களில் 11,383 பேருக்கு கரோனா தடுப்பூசி

மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் சனிக்கிழமை வரையிலான 6 நாள்களில் 11,383 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :29 மே 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் சனிக்கிழமை வரையிலான 6 நாள்களில் 11,383 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மன்னாா்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா ஏற்பாட்டின் படி, தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் மே 24 ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இம்முகாம்களில் வெள்ளிக்கிழமை (மே28) வரை 9583 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தொடா்ந்து, மன்னாா்குடி நகராட்சி ஜைனத்தெரு தொடக்கப்பள்ளி, உப்புக்காரத்தெரு புனித சூசையப்பா் தொடக்கப் பள்ளி, முத்து மாரியம்மன் கோயில், கீழராஜவீதி அசோகா பள்ளி, நீடாமங்கலம் எஸ்ஆா்விஎஸ் தொடக்கப் பள்ளி, பாளையக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, எளவனூா் ஊராட்சி தொடக்கப் பள்ளி ஆகிய 7 இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் 1800 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். இதன்மூலம், மன்னாா்குடி தொகுதியில் கடந்த 6 நாள்களில் 11,383 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.