அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மன்னார்குடி பகுதியில் தற்செயல் உள்ளாட்சித் தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப் பதிவு

மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதியில் 5 பதவி இடங்களுக்கு நடைபெற்ற தற்செயல் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க மக்கள் ஆர்வமாக வந்ததால்,

News image
சவளக்காரன் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் முகக் கவசம் அணிந்து வாக்குப்பதிவு செய்ய வரிசையில் நிற்கும் பெண்கள்.
Updated On :9 அக்டோபர் 2021, 11:16 am

DIN

மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதியில் 5 பதவி இடங்களுக்கு நடைபெற்ற தற்செயல் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க மக்கள் ஆர்வமாக வந்ததால், வாக்குப்பதிவு, சனிக்கிழமை காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 11 வார்டு மூவாநல்லூர் ஊராட்சித் தலைவர் பதவி, ஏத்தக்குடி ஊராட்சியில் 2 வார்டு உறுப்பினர்களுக்கு தென்பாதியில் ஒரு வார்டு உறுப்பினருக்கு என் மொத்தம் 5 காலி இடங்களுக்கு, அக்.9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றும் என தமிழ் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து, 11 வார்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு, எஸ்.ஆர்.ரமேஷ்(திமுக), எம்.குருபரன்(அதிமுக), ஆர்.வீரமணி(இந்திய கம்யூனிஸ்ட்), மா.சேகர்(அமமுக), செ.தினேஷ்குமார்(நாம்தமிழர் கட்சி), க.செந்தில்(சுயே) ஆகிய 6 பேர் போட்டியிட்டனர். இதில், திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்கிடையேதான் அதிக போட்டி நிலவியது.

உள்ளூர் அரசியல் பிரச்னை காரணமாக, இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் திமுக தனது வேட்பாளரை நிறுத்தியிருந்தது. 5 இடங்களிலும் சேர்ந்து பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக மொத்தம் 96 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. வாக்குப் பதிவு நாளான, சனிக்கிழமை காலையில் மழை காரணமாக சற்று மந்த நிலையில் இருந்த வாக்குப் பதிவு.10 மணிக்கு பிறகு பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

ஆண் வாக்காளரை விட பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். மன்னார்குடி சுற்றுவட்டப் பகுதியைச் சேர்ந்த இளம் வாக்காளர்கள் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளுக்கு பின்னலாடை, ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு வேலைக்குச் சென்று அங்கேயே தங்கியிருப்பதாலும், தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதாலும் விடுமுறை கிடைக்காததால் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை வாக்குப்பதிவு மையங்கள் குறைவாக காணப்பட்டது.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்பட்ட 22 ஊராட்சி, மூவாநல்லூர், ஏத்தக்குடி, தென்பாதி ஊராட்சி என அனைத்து வாக்குப் பதிவு மையங்களிலும் மதியம் வரை ஆர்வத்துடன் வாக்காளர்கள் வந்ததால் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப் பதிவு மையங்களில் வாக்காளருக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கிரிமி நாசினி திரவம், கையுறை வழங்கப்பட்டது. ஒருசிலர் முகக்கவசம் அணியாமல் வந்தனர். அவர்களுக்கு, முகக்கவசத்தை அலுவலர்கள் வழங்கினர்.

வாக்குப் பதிவு மையங்களை, மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் வி.கார்த்தி, மன்னார்குடி காவல்துணைக்கண்காணிப்பாளர் கே.கே.பாலசந்தர், வட்டாட்சியர் ஜீவானந்தம், தேர்தல் நடத்தும் அலுவலர் கே.பழனிசாமி,துணை தேர்தல் அலுவலர் எஸ்.சிவகுமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.