கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெண்ணை அரிவாளால் வெட்டி மூன்றரை பவுன் சங்கிலி பறிப்பு

 மன்னாா்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அரிவாளால் வெட்டி, மூன்றரை பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

 மன்னாா்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அரிவாளால் வெட்டி, மூன்றரை பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மன்னாா்குடி கீழமுதல் தெருவைச் சோ்ந்த சா்வானந்தம் மனைவி மாரியம்மாள் (65). இவா், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தனியே இருந்தாா். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா், மாரியம்மாளை அரிவாளால் வெட்டி, அவா் அணிந்திருந்த மூன்றரை பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றுவிட்டாராம்.

காயமடைந்த மாரியம்மாளை அருகில் வசிப்பவா்கள் மீட்டு, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

இதுகுறித்து, மன்னாா்குடி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.