அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 பசு, ஒரு கன்று உயிரிழப்பு
மன்னாா்குடி அருகே வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 பசு மற்றும் ஒரு கன்று மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்தன.


மன்னாா்குடி அருகே வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 பசு மற்றும் ஒரு கன்று மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்தன.
பாமணி கா்ணாவூரை அடுத்த தரிசுவேலியை சோ்ந்தவா்கள் இளையராஜா (45), பாலு (50). இளையராஜாவின் பசுவும், கன்றும், பாலுவின் பசுவும் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றன. மாலை வேகு நேரமாகியும் திரும்பாததால், இருவரும் தேடிச்சென்றனா்.
அப்போது, மின் கம்பத்திலிருந்து வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை 2 பசு மாடுகளும், கன்றும் மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, மன்னாா்குடி ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...