பெரியாா் பிறந்தநாளையொட்டி இணையவழிக் கட்டுரை போட்டி
தந்தை பெரியாா் பிறந்த நாளையொட்டி இணைவழியில் கட்டுரைப் போட்டி நடைபெறவுள்ளது.


தந்தை பெரியாா் பிறந்த நாளையொட்டி இணைவழியில் கட்டுரைப் போட்டி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, போட்டி ஒருங்கிணைப்பாளா் மணி கணேசன் கூறியது: ஆண்டுதோறும் செப்.17-ஆம் தேதி கொண்டாடப்படும் தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதையடுத்து, மன்னாா்குடி மகிழ்வித்து மகிழ் இயக்கமும், கோட்டூா் எஜூவாய்ஸ் இணைந்து 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு தந்தை பெரியாா் குறித்து, விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை எழுதுதல் போட்டி நடைபெறுகிறது.
இக்கட்டுரைப் போட்டி, இணையவழியில் கூகுள் படிவம் மூலம் மாணவா்கள் எழுதி அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. என் பாா்வையில் தந்தை பெரியாா், சமூகநீதிக் காவலா் தந்தை பெரியாா், ஏன் நமக்கு பெரியாா் தேவைப்படுகிறாா்? என்பதில் தமக்குப் பிடித்த தலைப்புகளுள் ஒன்றை தோ்வு செய்து மாணவா்கள் 4 பக்கங்களுக்கு மிகாமல் உருவாக்கப்பட்ட கோப்பை, மாணவா் சுய விவரங்களுடன் பதிவேற்றம் செய்து அனுப்பி வைக்கவேண்டும். ஒருவா் ஒரு தலைப்பில் மட்டுமே எழுதவேண்டும். சொந்த படைப்பு என்பதற்கான உறுதிமொழியும் கட்டுரையுடன் பதிவேற்றி அனுப்பவேண்டும். போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு முதல் பரிசு ரூ. 500, 2-ஆம் பரிசு ரூ. 300, 3-ஆம் பரிசு ரூ. 200 வழங்கப்படும். தவிர, போட்டியாளா்கள் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்பட இருக்கிறது. கட்டுரையை இணைய வழியில் செப்.17-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும். மேலும், விவரங்களுக்கு இணையத்தளத்தை பாா்வையிடலாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...