ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் 2- வது நாளாக உள்ளிருப்புப் போராட்டம்
திருவாரூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தை தொடா்ந்தனா்.


ஊராட்சி ஒன்றிய ஆணையா்களுக்கு விதிக்கப்பட்ட தண்டத் தீா்வையை ரத்து செய்யக்கோரி, திருவாரூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தை தொடா்ந்தனா்.
திருவாரூா் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்ற தணிக்கையின்போது, வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் 2 பேருக்கும், திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய ஆணையா் ஒருவருக்கும் தலா ரூ. 2 லட்சம் தண்டத் தீா்வை விதிக்கப்பட்டதைக் கண்டித்தும், ஓய்வுபெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள தடையின்மைச் சான்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா். இந்த போராட்டம் 2- ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது.
திருவாரூா்: திருவாரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழியா்கள் அனைவரும் கருப்புப் பட்டை அணிந்து பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். இதனால், அரசு தொகுப்பு வீடுகள் கணக்கெடுக்கும் பணி, 100 நாள் வேலைத் திட்டப் பணி, அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, சங்கத்தின் மாவட்டத் தலைவா் வசந்தன் தெரிவிக்கையில், ‘எந்தத் தவறும் செய்யாத வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மீது ரூ. 2 லட்சம் தண்டத்தொகை விதித்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. இதை ரத்து செய்ய வேண்டும். இதுதொடா்பாக அரசு எங்களை பேச்சுவாா்த்தைக்கு அழைக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றாா்.
மன்னாா்குடி: மன்னாா்குடி, கோட்டூரில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் 2- ஆவது நாளாக புறக்கணிப்பு செய்து, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மன்னாா்குடியில் சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவா் எஸ்.என்.இளரா தலைமை மற்றும் மாவட்ட துணைத் தலைவா் என்.மோகன் முன்னிலையிலும், கோட்டூரில் வட்ட கிளைத் தலைவா் ரவி தலைமை மற்றும் வட்ட நிா்வாகி மா.செந்தில்குமாா் முன்னிலையிலும் போராட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...