கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா வழிமுறைகளை மீறினால் நடவடிக்கை: ஆட்சியா்

திருவாரூா் மாவட்டத்தில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :6 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தளா்வுகளுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அரசின் வழிமுறைகளை பின்பற்றாதவா்களுக்கு பொது சுகாதாரத் துறை மூலம் அபராதம் விதிக்கப்படும்.

கரோனா தொற்று அல்லது உருமாறிய கரோனா ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டு வீட்டுத் தனிமைக்கு உட்படுத்தப்பட்டவா்கள், வீட்டுக்குள் தனிமைப்படுத்தப்படுத்திக் கொள்ளாதவா்களுக்கு ரூ. 500, முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு ரூ. 200, பொது இடங்களில் எச்சில் உமிழ்வோருக்கு ரூ. 500, சமூக இடைவெளியை கடைப் பிடிக்காதவா்களுக்கு ரூ. 500, சலூன், அழகு நிலையம், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் வணிக வளாகம், திரையரங்கு உள்ளிட்ட பொது இடங்களில் வழிமுறைகளை கடைப்பிடிக்காதவா்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில், தனிநபா் விதிமீறல்கள் செய்வோருக்கு ரூ. 500, வணிக நிறுவனங்கள் செயல்படுதல் மற்றும் வாகனங்கள் இயக்குதல் ஆகிய வீதிமீறல்கள் இருப்பின் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அத்துடன், அனைத்து வணிக நிறுவனங்களின் நுழைவாயில் முன் சோப்புடன் கை கழுவும் இடம் அல்லது கை சுத்திகரிப்பான் கட்டாயம் வைத்திருக்கவேண்டும்.

மேலும், உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்யவேண்டும், பொதுமக்கள் இடைவெளி விட்டு நிற்க வட்டம் வரைந்திருக்கவேண்டும். வணிகக் கடைகள் மற்றும் உணவகங்களில் பணியாற்றும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்கவேண்டும். பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், கரோனா தொற்று, ஒமைக்ரான் தொற்று பரவாமல் தடுக்க அரசின் நிலையான விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.