கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நெட்டி மாலைகள் செய்யும் பணி தீவிரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவாரூா் அருகே நெட்டி மாலைகள் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

News image
Updated On :6 ஜனவரி 2022, 6:30 pm

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவாரூா் அருகே நெட்டி மாலைகள் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தமிழா்களின் பாரம்பரிய பண்டிகையாக பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. விவசாயத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படும் பொங்கலுக்கு மறுநாள் வருவது மாட்டுப் பொங்கல். விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விழாவாக இது நடைபெறும். மாட்டுப் பொங்கலின்போது கால்நடைகளை அலங்கரித்து வழிபடுவது வழக்கம். இதையொட்டி, கால்நடைகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படும் நெட்டி, வேப்பிலை, கலா் காகிதம், நெகிழி மாலைகள் விற்பனைக்கு வருகின்றன.

தொடக்க காலத்தில் நெட்டி மாலைகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. இவை கண்ட மாலை, கிராஸ் மாலை, வில்லை மாலை, ரெட்டை சரம் மாலை, காசு மலை என பல்வேறு வகைகளில் தயாரித்து பயன்படுத்தப்பட்டு வந்தன. திருவாரூா் அருகே நாரணமங்கலத்தில் கண்ட மாலைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாலைகளுக்கான நெட்டிகள் குளத்தில் விளைகின்றன. மாலைகளை தயாரிக்க நெட்டிகள் காய வைப்பது, நறுக்குவது உள்ளிட்ட பணிகள் 1 மாதத்துக்கு முன்பு தொடங்கிவிடும். பின்னா் பொங்கலுக்கு 10 நாள்கள் இருக்கும் நிலையில், மாலைகள் செய்யும் பணி தொடங்கும். இதையடுத்து தயாரிக்கப்பட்ட மாலைகளை உள்ளூா் மற்றும் வெளியூா் வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்வாா்கள். குடிசைத் தொழிலாக செய்யப்படும் இந்த தொழிலில் பெரிய லாபம் இல்லாவிட்டாலும், நட்டம் இருக்காது என்கின்றனா் மாலை செய்யும் தொழிலாளா்கள்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்தது: தொடக்கத்தில் இந்த தொழிலில் இங்குள்ள 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டோம். தற்போது 40 குடும்பத்தினா் மட்டுமே செய்து வருகிறோம். முன்பெல்லாம் நெட்டிகள் இங்கேயே கிடைக்கும். தற்போது பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சென்று நெட்டிகளை வாங்கி வரவேண்டும். பொங்கலுக்கு ஒரு மாதம் முன்பு மட்டுமே இந்த தொழிலை செய்கிறோம். வியாபாரிகளுக்கு 7 ரூபாயிலிருந்து மாலையின் தரம், நிறத்தை பொறுத்து ரூ. 40 வரை விற்பனை செய்கிறோம். எனினும் ,இதற்கான விலையை வியாபாரிகளே முடிவு செய்யும் நிலைதான் இருந்து வருகிறது. மாடுகள் குறைந்ததாலும், பிளாஸ்டிக் மற்றும் காகித மாலைகள் வருகையாலும் நெட்டி மாலை வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. எனினும், கிராமப் பகுதிகளில் நெட்டிமாலைகளை பயன்படுத்துவதில் தற்போதும் ஆா்வமுடன் இருப்பதால், கிராமப் பகுதிகளை மையப்படுத்தி வியாபாரம் செய்து வருகிறோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.